மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டார். இதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பு 7,83,500 வாக்காளர்கள் இடம்பெற்று இருந்தனர். பின்னர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்குப் பிறகு 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் மயிலாடுதுறை , பூம்புகார் , சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும் ஒருங்கிணைத்து ஆண் வாக்காளர்கள் 3,51,453 நபர்களும், பெண் வாக்காளர்கள் 3,56,623 நபர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 46 நபர்களும் என மொத்தம் 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 862 வாக்குச்சாவடி மையங்கள் இருந்த நிலையில், 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதியதாக 88 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு, தற்பொழுது 950 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.
மயிலாடுதுறை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது வாக்காளர் சிறப்பு திருத்தபணி75,378 பேர்நீக்கம்
-
By Satheesa

- Categories: News
- Tags: correction votersdistrict newsmayiladuthuraispecial correction of voterstamilnadu
Related Content
த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் - யார் அந்த நபர்?
By
Kavi
December 20, 2025
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்
By
Kavi
December 20, 2025
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்
By
Kavi
December 20, 2025
எஸ்ஐஆர் பணிகள் எதற்கு? - மோடியின் அதிரடி பதில்
By
Kavi
December 20, 2025