மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ரஜினி கருணாநிதி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் சங்க நிர்வாகிகள், மற்றும் தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், கிராம சுகாதார ஊக்குனர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கணினி உதவியாளர்கள் என அனைத்து நிலை ஊழியர்களும் கலந்து கொண்டு ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், ஓய்வூதிய பலன், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, குடும்ப நல நிதி, பணிக்கொடை முழக்கங்களை எழுப்பினர்.
