மயிலாடுதுறை2மணி நேரமாக பலத்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இரண்டு வாரங்களாக மழை பெய்யாமல் கோடை வெப்பம் போன்று பருவநிலை மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் இரண்டு மணி நேரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை வைத்தீஸ்வரன்கோயில்
செம்பனார்கோயில், குத்தாலம் எலந்தங்குடி
மங்கைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், மழை காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

Exit mobile version