மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதி வழியே காவிரி ஆறு ஓடுகிறது. இதன் இரண்டு கரைகளிலும் காசி மாநகரில் உள்ளது போல ஏழு இடங்களில் விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளது. அதில் ஒன்றான சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த படித்துறை விஸ்வநாதர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தன இதனை அடுத்து மகாபூர்ணாகுதிக்கு பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வமாக எடுத்துவரப்பட்டு கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது . தொடர்ந்து மூலவர் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.