ஒன்றிய பாஜக மோடி அரசின் கை பாவையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீரமைப்பு SIR எதிர்த்து விழுப்புரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் திமுக கூட்டணி கட்சி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய மோடி அரசின் கை பார்வையாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் sir ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன உரை ஆற்றினார் இதில் காங்கிரஸ்,மதிமுக,மக்கள் நீதிமைய்யம்,தமிழக வாழ்வுரிமை கட்சி,விசிக ,கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்
