மயிலாடுதுறையில் தமிழர் திருநாள் திராவிட பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு:-
மயிலாடுதுறையில் நகர திமுக மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக தமிழர் திருநாள் திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகள் சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியாக நடைபெற்ற மினிமராத்தான் போட்டி காவிரி நகர் மேம்பாலத்தில் துவங்கியது. மராத்தான் போட்டியை நகர் மன்ற தலைவர் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பழகன் அருட்செல்வன் தொடங்கி வைத்தனர். நான்கு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டி சாய் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. மரத்தான் போட்டியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சிறுவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஓடி வந்தது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5000 ரூபாயும், இரண்டாவது பரிசு 3500 ரூபாய், மூன்றாம் பரிசு 2500 ரூபாய், மற்றும் நான்கு முதல் பத்தாவது பரிசு வரை இருபாலருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இருபாலருக்கும் ஓட்டப் போட்டிகள் நீளம் தாண்டுதல் போட்டிகள் நடைபெற்றன.

















