முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்தும் வேண்டியும் வக்ப் சட்டத்தை எதிர்த்தும் செப்.20-ல் மமக பேரணி

முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்தும் வேண்டியும், வக்ப் சட்டத்தை எதிர்த்தும் மயிலாடுதுறையில் செப்.20-ல் மமக பேரணி மற்றும் பொதுக்கூட்டம்:- அதேநாளில் விஜயின் பிரச்சார பயணம் நடைபெறவுள்ள நிலையில், உரிய பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வலியுறுத்தல்:-

மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில அமைப்பு செயலாளர் அமின் சிறப்புரையாற்றி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்தும் வேண்டியும், வக்ப் சட்டத்தை எதிர்த்தும் மதுரையில் மாநாடு பேரணி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறையில் மாநாடு விளக்க பொதுக்கூட்டம், பேரணி வருகின்ற 20ஆம்தேதி நடைபெறுகிறது. இதில் மமக மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்எல்ஏ பங்கேற்கவுள்ளனர். மமக முன்அனுமதி பெற்றுள்ள நிலையில் அதேநாளில் விஜயின் பிரச்சார பயணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் போலீசார் பேரணி பொதுக்கூட்டத்திற்கு எந்தவித இடையூறுமில்லாமல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்தியாவில் லட்சகணக்கான ஓட்டுகள் சூரையாடப்பட்டுள்ளது குறித்து ராகுல்காந்தி குரல் கொடுத்து வருகிறார். சர்கார் படத்தில் ஒரு ஓட்டிற்காக விஜய் போராட்டம் நடத்தி முதலமைச்சராவார். ஆனால் லட்சகணக்கான ஓட்டுகள் நீக்கப்பட்டதற்கு விஜய் வாயே திறக்கவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும், பேருந்தில் சென்ற இஸ்லாமிய கல்லூரிபெண் மீது தாக்குதல் நடத்தியது குறித்து பெரம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும்’ தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்யவில்லை. கைது செய்யாவிட்டால் விரைவில் பெரம்பூர் காவல் நிலையத்தை முற்றகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

Exit mobile version