பாண்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான துவக்கபள்ளி கட்டிடத்தில் பராமரிப்பு பணி வகுப்பறைகள் தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் ஊராட்சியில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் கட்டிடம் பழமையானது என்பதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டம் 2025 – 26 ன் கீழ் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் இதற்காக செலவிடப்பட்ட நிலையில் இதில் முறைகேடு ஏற்பட்டதால் பள்ளி முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் தற்பொழுதும் பெய்த மூன்று நாள் மழைக்கு பள்ளி மேற்கூரையில் தண்ணீர் தேங்கி, பள்ளி வகுப்பறை முழுவதும் மழை நீர் கசிந்து தேங்கியுள்ளது. இதனால் வகுப்புகளுக்குள் உட்கார்ந்து குழந்தைகள் பாடம் படிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர்கள் துணையுடன் பள்ளி ஆசிரியர்கள் தண்ணீரை வெளியேற்றி காயவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பிளாஸ்டிக் சேர்களில் பள்ளி குழந்தைகள் பள்ளி வளாகத்திற்கு வெளியே வெயிலில் அமர்ந்துள்ளனர். பள்ளி கட்டிடத்தை முறையாக சீரமைத்து இருந்தால், தண்ணீர் ஒழுகாமல் நின்றிருக்கும். மேலும் வலு குறைந்து கட்டிடம் காணப்படுவதால் கட்டிடம் இடியும் ஆபத்தை விளைவிக்கும் இன்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Exit mobile version