மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயத்தில் ஸ்ரீ மகாகாளியம்மன் 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்தி சுவற்றில் தத்ரூப உருவமாக வரைபடமாக வரைந்தும், சிலை அமைத்தும் பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். பழமையான இக்கோயில் 2013 ஆம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு தரைத்தளம் கருங்கல்லால் அமைக்கப்பட்டு பழமை மாறாமல் புணரமைப்பு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, இன்று காலை நடைபெற்ற நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவில் மகாபூர்ணாகுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாசாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி விமான கும்பத்தை அடைந்து விமான கலசத்தில் புனித நீர் வார்த்து, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
