திருவாரூர் அருகே வீட்டில் புகுந்த லாரி அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர் , நகர போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே வீட்டில் புகுந்த லாரி அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர் . நகர போலீசார் விசாரணை .

திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த ட்ரைலர் லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த இரண்டு பெரிய மரங்கள் மீது மோதி காவல் ஆய்வாளர் மகாலட்சுமி என்பவர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி அருகே இருந்த காமராஜர் என்பவரது வீட்டில் மோதி நின்றது . இதில் வீட்டில் இருந்த யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை லாரி ஓட்டுனர் காயத்துடன் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version