கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே தனியார் கட்டிடத்தில் அனுமதி இல்லாமல் மதுபானங்களை இறக்கிய டாஸ்மார்க் வாகனத்தை சிறைபிடித்த ஊர் பொதுமக்கள்- அனுமதி இல்லாமல் மதுபான குடோனாக பயன்படுத்தியதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஊர் மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் மனு.
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே ஸ்ரீ கிருஷ்ணா புரத்தில் தனியார் இடத்தில் சுமார் 20 தினங்களுக்கு முன்பு எவ்வித அனுமதியும் இன்றி ஒரு கட்டிடத்தை கட்டி அதில் மது பான குடோனாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று மதுபானங்களை இறக்குவதற்காக டாஸ்மாக் வாகனம் அங்கு வந்துள்ளது இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் விரைந்து சென்று அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். அப்போது டாஸ்மாக் ஊழியர் காவல்துறை அனுமதியோடு தான் மதுபானங்களை இங்கே இறக்க வந்துள்ளோம் என தெரிவிக்க ஊர் பொதுமக்கள் டாஸ்மார்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் டாஸ்மாக் வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஊர்மக்கள் கட்டிடத்தின் முன்பு நின்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று இணைந்து மருங்கூர் பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி அதில் மதுபான குடோனாக பயன்படுத்தியதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
