ஐபிஓ வெளியிடும் லென்ஸ்கார்ட் ரூ.2,150 கோடி நிதி திரட்ட திட்டம்!

இந்தியாவின் முன்னணி கண் கருவி விற்பனை நிறுவனமாகத் திகழும் லென்ஸ்கார்ட் (Lenskart), தனது தொடக்க பங்கியல்(public issue) வெளியீட்டை மேற்கொள்ளும் வகையில் செபிக்கு (SEBI) தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. இந்த முறையில் நிறுவனம் சுமார் ரூ.2,150 கோடி வரை நிதி திரட்டும் திட்டத்தை வகுத்துள்ளது.

SoftBank ஆதரவுடன் செயல்படும் இந்த நிறுவனம், KKR & Co., TPG Inc., மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணையம் போன்ற உலகளாவிய முதலீட்டாளர்களின் ஆதரவுடன் 2010ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சமீபத்தில் இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் மீட்பட தொடங்கியுள்ள நிலையில், Lenskart தனது ஐபிஓ திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

வெளியிடவுள்ள ஐபிஓவில் புதிய பங்குகள் வெளியீடு அடங்கும் என வரைவு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்திய தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் உள்ளூர் பங்குச் சந்தைகளில் முதலீட்டை நோக்கி திரும்பி வருகின்ற பரப்புரையில் ஒரு பகுதியாகும்.

மேலும், ஜூன் 2024ல், லென்ஸ்கார்ட், டெமாசெக் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபிடிலிட்டி மேனேஜ்மென்ட் & ரிசர்ச் நிறுவனங்களிடமிருந்து $200 மில்லியன் (சுமார் ரூ.1,670 கோடி) முதலீட்டாக பெற்றுள்ளது. இந்நிலையில், ஃபிடிலிட்டியின் ஏப்ரல் மாத போர்ட்ஃபோலியோ மதிப்பீட்டின் அடிப்படையில், லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு $6.1 பில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, SoftBank ஆதரவுடன் செயல்படும் மற்றொரு நிறுவமான InMobi Pte நிறுவனமும், இந்த ஆண்டில் $1 பில்லியன் அளவிலான ஐபிஓவை இலக்காகக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version