குடவாசல் நீதி மன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..”
இ-பைலிங் முறையை கைவிடக் கோரி கோரிக்கை.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் உள்ள மாவட்ட உரிமை இயல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
உயர் நீதிமன்றம் இ- ஃபைலிங் முறையை கடைபிடிக்க வேண்டும்... என உத்தரவிட்டது.. இந்த இ -ஃபைலிங் முறை வழக்கறிஞர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்தும் என்றும், கீழமை நீதிமன்றங்களில் எந்தவித கட்டமைப்பும் இல்லாத சூழலில்.. இ- ஃபைலிங் முறை திணிக்கப்பட்டதாகவும்... இதனால் பொதுமக்களுக்கு செலவினங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.. என்றும் இ- ஃபைலிங் முறையை உயர்நீதிமன்றம் கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்து..
குடவாசல் மாவட்ட உரிமை இயல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு.. குடவாசல் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கந்தசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது..
இந்த போராட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் ஜி.டி சிவசங்கரன், வழக்கறிஞர் செந்தில்நாதன், சங்கத்தின் இணை செயலாளர் மற்றும் பொருளாளர் சபேசன், வழக்கறிஞர் கபிலா உள்ளிட்ட நன்னிலம், வலங்கைமான், குடவாசல் நீதிமன்றங்களின் பணியாற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

















