மயிலாடுதுறை நீதிமன்றம் முன்பு மாவீரன் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்குகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர்கள் குபேந்திரன் மற்றும் முருகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வழக்குகள் மற்றும் வாய்தாக்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் முறையை கைவிட வேண்டும் எனவும் , இதன் மூலம் ஒரே நேரத்தில் அனைத்து வழக்குகளையும் பதிவு செய்யும்போது நேர விரையும் மற்றும் செலவு அதிகமாககுவதாகவும் , அவசர வழக்குகள் மற்றும் அன்றாடம் தாக்கல் செய்யக்கூடிய வழக்கு , வாய்தாக்கல் இறுதி நேரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . எனவே இந்த ஆன்லைன் பதிவேற்ற முறையை கைவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் பலர் கோஷங்களை எழுப்பினர்.

















