திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு திருவாரூர் மாவட்ட மையம் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நில அளவை கள பணியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக —
பணிகளை முறைப்படுத்தி
நிலஅளவை களப்பணியாளர்களின் பணி சுமையை போக்கிடவேண்டும் ,
தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவிகளை திரும்ப தர வேண்டும் , புறஆதாரம் மற்றும் ஒப்பந்த பணி நியமனத்தை முற்றிலும் கைவிடவேண்டும் ,
நிலஅளவர் பணியிடங்களை நிரப்பிடவேண்டும் , ஊதிய முரண்பாடுகளை களைந்துட வேண்டும் , வட்டம் , குறுவட்டம் , நகர சார்ஆய்வாளர் , ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,
இந்த ஆர்ப்பாட்டமானது
நிலஅளவை அலுவலர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் துணைத்தலைவர் மகேஸ்வரி , பொருளாளர் தேவசேனா , கோட்ட தலைவர்கள் வினோத்குமார், பிரபாகரன் ,
கோட்டபொருளாளர் ஆனந்தபாரதி ,
உட்பட அரசுஊழியர் சங்கத்தினர் வருவாய் துறை சங்கத்தினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
















