விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் R.இலட்சுமணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மற்றும் தாட்கோ சேர்மனான நா.இளையராஜா கலந்து கொண்டு இளைஞர் அணியின் எதிர்கால பணித் திட்டங்கள் ,அமைப்பு வலுப்படுத்தல் நடவடிக்கைகள், இளைஞர் அணியின் வளர்ச்சி பணிகள், மற்றும் மக்கள் தொடர்பு திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மணன் ஒரு மனிதனுக்கு எப்படி இதயம் முக்கியமோ அதுபோல கட்சிக்கு இளைஞர் அணியின் முக்கியமென தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் இரா.கண்ணப்பன், மு.சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து,
இதில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், இளைஞர் அணி நகர, ஒன்றிய, பேரூர் கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

















