மயிலாடுதுறை நகரில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் வருகின்ற 11 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் மாயூரநாதர் கோவில் யானை மீது எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு ; திரளான பக்தர்கள் சாமி தரிசனம் :-
மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயத்தில் ஸ்ரீ மகாகாளியம்மன் 16 கைகளில் ஆயுதங்கள் ஏந்தி சுவற்றில் தத்ரூப உருவமாக வரைபடமாக வரைந்து பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். பழமையான இக்கோயில் 2013 ஆம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு தரைத்தளம் கருங்கல்லால் அமைக்கப்பட்டு பழமை மாறாமல் புணரமைப்பு செய்யப்பட்டு வருகின்ற 11ஆம் தேதி கும்பாபிஷேகம்
நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 7 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி இன்று காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து புனிதநீர் அடங்கிய கடம் மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை மேல் ஏற்றியும், கோபுர கலசம் வீதி உலாவாக மேளதாள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு யானை அபயாம்பிகைக்கு கஜ பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து இன்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கி 11ஆம் தேதி காலை நான்காம் காலயாக சாலை பூஜைகள் நிறைவுற்று காலை 10 லிருந்து 11 மணிக்குள் கும்பாபிஷேக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
