மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா N.N சாவடி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளை வாரண விநாயகர் கோவில் உள்ளது இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கோவில் முன் யாகசாலை அமைத்து அதில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு நேற்று முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வளம் வந்து கும்ப கலசத்தை அடைந்தது கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

















