தலைச்சங்காடு தோப்புத்தெருழில் உள்ள சென்டாடும் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் தலையுடையவர் கோவில் பத்து தலைச்சங்காடு தோப்பு தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு விநாயகர், புவனேஸ்வரி அம்மன், பூர்ண புஷ்களாம்பிகா சமேத சென்டாடும் அய்யனார், மேலவாசல் வீரனார், சப்த கன்னிகள் மற்றும் பரிவார சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது முன்னதாக கடந்த 20 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் தொடங்கி இரண்டு கால யாக பூஜை உடன் நிறைவுற்று பூர்ணாகதி நடைபெற்று கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

















