குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மாநகர மேயருமுன மகேஷ் இன்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் விகிதத்தை குறைக்கும் நியாயமற்ற நடவடிக்கைக்கு எதிராக போராடுவேன். தமிழகத்தை தலைகுனியே விடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்கிறேன். வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கைக்கு எதிராக நிற்பேன். நீட் தேர்வு மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்த விட மாட்டோம். தமிழ் மொழி பண்பாடு மற்றும் அதன் பெருமைக்கு எதிரான எந்த ஒரு பாகுபாட்டையும் எதிர்த்து போராடுவேன். பெண்கள் விவசாயிகள் மீனவர்கள் நெசவாளர்கள் தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்க தேவையான நீதிக்காக போராடுவேன் என்ற நோக்கத்துடன் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டு தமிழக முழுவதும் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 70 நாட்களாக 68 ஆயிரம் வாக்கு சாவடிகளில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை பொருத்தவரை ஒரு லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்களை சந்தித்து 3 லட்சத்து 68 ஆயிரத்து 88 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.இதேபோல் கிழக்கு மாவட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ளதில் 45 சதவீதம் வாக்காளர்கள் தற்போது தி.மு.க. சேர்க்கப்பட்டுள்ளனர். பழைய உறுப்பினர்கள் தங்களது கார்டுகளை புதுப்பித்துக் கொண்டதுடன், புதிய உறுப்பினர்களும் அதிக அளவு ஆர்வமாக சேர்ந்துள்ளனர். இரண்டாம் கட்டமாக அண்ணா பிறந்த நாளான நாளை 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளின் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. குமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள 885 வாக்குச்சாவடிகளிலும் நாளை உறுதிமொழி எடுக்கப்படுகிறது.கன்னியாகுமரி பகுதியில் நாளை காலை நடைபெறும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொள்கிறார். கரூரில் வருகிற 17-ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. மூன்றாம் கட்டமாக வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் தமிழக முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு வெற்றிவிழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியின் மூலம் குடும்பங்களை நேரில் சந்தித்து மக்களை சந்திக்க வாய்ப்பு அளித்த முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். நாளை(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள அண்ணா சிலைக்கு கனிமொழி எம்.பி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி பகுதிகளில் உறுதிமொழி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் நாகர்கோவிலில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதனைத்தொடர்ந்து முருகன் குன்றத்தில் கழகக் கொடி ஏற்றி வைக்கிறார். இதையடுத்து நாகர்கோவில் தேரேகால்புதூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து மேற்கு மாவட்ட பகுதிகளில் நடைபெறும் வாக்குச்சாவடிகள் உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேறுகிறார். நிகழ்ச்சிகளில் திரளான நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மாநகர மேயருமுன மகேஷ் இன்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி
