சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படம் ஜூன் 20 திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனுஷின் நடிப்பு, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரிதும் பாராட்டப்பட்டது.
படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணியாற்றியுள்ளார்.
வெளியாகிய சில நாட்களிலேயே, ‘குபேரா’ திரைப்படம் உலகளவில் ரூ.134 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘குபேரா’ திரைப்படம் ஜூலை 18ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.