கொள்ளிடம் அருகேயுள்ள நல்லவிநாயகபுரம் ஊராட்சி கடைக்கண் விநாயகநல்லூர் கிராமத்தில் பாரதிமோகன் என்பவருக்குச் சொந்தமான ஓர் ஏக்கர் நஞ்சை நிலம் உள்ளதாம். இந்த நிலத்தை, கொள்ளிடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் போலி பட்டா மூலம் மற்றெறாரு பெண்ணின் பெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்யப்பட்டதாகக் கூறறப்படுகிறறது. இதனால், சார்பதிவாளரை கண்டித்து, பத்திரப் பதிவு அலுவலகம் முன் நில உரிமையாளரின் உறறவினர்களான விவசாயிகள் சீயாளம் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் மகன் ரவிச்சந்திரன், முருகையன் மகன் ராஜேந்திரன், ஜெயராமன் மகன் இளவரசன், நடேசன் மகன் சுந்தரமூர்த்தி ஆகியோர் அரை நிர்வாணத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, வட்டாட்சியர் அருள்ஜோதி மற்றும் கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸôர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
