திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ மன்னீஸ்வரர் கோயிலில் கத்தி திருவிழா மற்றும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் 500 ஆண்டுகள் பழமையான மன்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள வாள் முனிஸ்வரர் சிலை சுமார் 50 அடி உயரமுள்ள சிலையாகும். இதனால் அப்பகுதியில் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வாள் (கத்தி) திருவிழா என்ற ஒரு திருவிழா நடைபெறும்.
அப்போது, சீமாபுரம் என்ற கிராமத்தில் இருந்து எட்டு அடி 40 கிலோ எடை உடையது வெள்ளியால் ஆன வாள் (கத்தி) இந்த கோவிலுக்கு வழங்கப்படும். கடந்த ஐந்து வருடங்களாக இந்த கோவில் புனரமைக்கும் வேலை நடைபெற்றதால் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில், தற்போது கும்பாபிஷேகம் முடிந்ததால், 145வது கத்தி திருவிழா மற்றும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
 
			

















