ஜோர்டான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன், அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார்.
ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் சென்று இருக்கிறார். முதலில் அவர் நேற்று ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். இன்று பிரதமர் மோடியை அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன், அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதில் இந்திய பிரதமர் மோடியை முன் இருக்கையில் அமரச்சொன்ன ஜோர்டான் மன்னர், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அவரே காரை ஓட்டி ஊரை சுற்றிக்காண்பித்தார்.
















