மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சுதா தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு, இரண்டு வருடங்களாக தொகுதி பக்கமே வராமல் facebook அரசியல் செய்துவரும் இவருக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை பற்றி எதுவும் தெரியாது எனவும், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது கடினம் எனவும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு :-

சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி சார்பில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் மயிலாடுதுறைக்கு ஜமால் முகமது யூனுஸ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மயிலாடுதுறை தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஜமால் முகமது யூனுஸ் அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவரை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஆர் சுதா பரிந்துரை செய்ததாக தகவல் பரவியது இந்நிலையில் வேட்பாளர் அறிகுற கூட்டம் மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது பங்கேற்று பேசிய மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஆர் சுதா திமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் சிறுபான்மையினர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தற்போதைய வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வேட்பாளர் மயிலாடுதுறை அருகே ஆடுதுறையைச் சேர்ந்தவர் என்று ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி திருமதி ஆர். சுதா வெற்றி பெற்று இரண்டு வருடங்கள் ஆகியும் தொகுதி பக்கமே வராமல் பேஸ்புக் அரசியல் செய்து வருவதாகவும் இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மயிலாடுதுறை தொகுதி எது என்று கூட தெரியாமல் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தவறான பரிந்துரை செய்து சீட்டு வாங்கி கொடுத்துள்ளதாகவும், குற்றம் சாட்டி உள்ளனர். திருமதி ஆர் சுதா கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த பொழுதே தலைமையை நினைத்து வாக்கு சேகரித்தோம் ஆனால் தற்பொழுது, மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுபான்மையினர் பலர் விருப்பம் மனு அளித்திருந்த நிலையில், தொகுதியை காங்கிரஸ் கட்சி புறக்கணித்து இருக்கிறது இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பாதையில் செல்லாமல் உள்ளது , கடந்த கால தவறுகளில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த முறை காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை தொகுதியில் வெற்றி பெறுவது சந்தேகம் எனவும் முக்கிய பொறுப்பாளர்களை குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version