January 24, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

கேதார்நாத் கோவில்

by Satheesa
September 16, 2025
in Bakthi
A A
0
கேதார்நாத் கோவில்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையில் கேதார்நாத் கோவில் உள்ளது. இந்த ஜோதிர்லிங்கம் மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டது
என்றும் இந்தியாவின் மிக முக்கியமான புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும் என்றும் நம்பப்படுகிறது.

இமய மலையின் எல்லையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் பல இயற்கை சீற்றங்களைக் கண்டுள்ளது. ஆனாலும் இந்த கோயிலைச் சிறு துரும்பும் அந்த சீற்றங்களால் அசைக்க முடியவில்லை. இறைவன் தன் திருவிளையாடலைப் பல இடங்களில் ஆடினாலும் இந்த கோயில் தனிச் சிறப்பைக் கொண்டது. பெரும் வெள்ளத்தால் அந்த பகுதியே சிதைந்தாலும் கோயில் தன் கம்பீரத்தைக் கைவிடாமல் நிலைத்திருக்கிறது.

இந்தியாவின் பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாகவும் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகவும் இந்த கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பஞ்ச கேதார ஆலயங்களில் ஒன்றாகவும் உள்ளது. திருஞான சம்பந்தர் மற்றும் சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற கோயில்களில் ஒன்றாகவும் அமைந்த சிறப்பைப் பெற்றது. மேலும் இந்த கோயிலானது பல மகிமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

கேதர்நாத் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டில் மிகவும் பயங்கரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகிய ஆக்ரோஷமான இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்தது.
அந்த பேரழிவுகள் நிகழ்ந்த போதும் இந்த கோயிலில் ஒரு சிறிய விரிசல் கூட ஏற்படவில்லை என்பது பொதுமக்களுக்கு மட்டுமல்ல புவியியல் ஆய்வாளர்கள் மற்றும் கட்டிட கலைஞர்களுக்கே கூட ஆச்சரியமான விசயமாக இருந்தது.

மேலும் ஒரு ஆச்சரியமாக அந்த முழு பேரழிவின் மைய புள்ளியும் கோயிலுக்கு சற்று மேலே சில மீட்டர் தொலைவிலேயே இருந்தது.
கேதார்நாத் கோயில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரி~pகே என்னும் பகுதியில் இருந்து சுமார் 223 கி.மீ தூரத்தில் 11,755 அடி உயரத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் உள்ள கர்வால் இமய மலையின் எல்லையில் அமைந்துள்ளது.

இந்த கோயிலானது கடுமையான தட்ப வெட்ப நிலையைக் கொண்டுள்ளதால் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இருந்து நவம்பர் மாதத்தின் கார்த்திகை பௌர்ணமி வரை என ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்.

மற்ற மாதங்களில் கோயிலின் சிலைகளைக் குப்தகாசியின் உகிமத் என்னும் இடத்திற்குக் கொண்டு சென்று வழிபடுவது நடைமுறையாக
உள்ளது. இக்கோயிலை அடைய 14 கி.மீ. நடைப்பயணமாகவோ அல்லது குதிரைவண்டியிலோ அல்லது பல்லக்குச் சேவைகளின் மூலமாகவோ மேற்பகுதிக்குச் செல்ல வேண்டும்.

மகாபாரதப் போரின் விளைவாக பாண்டவர்கள் தன் உறவினர்களையும் ஏராளமான உயிர்களையும் கொன்றதால் தங்களுக்கு ஏற்பட்ட பாவங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள சிவ பெருமானைத் தேடி ஒரு பயணத்தை மேற்கொண்டனர். இறுதியாக அவர்கள் கேதார்நாத் பகுதியில் வந்தடைந்த போது அங்கு ஒரு பெரிய அளவிலான காளை எருமையைக் கண்டார்கள்.

அந்த எருமையானது பீமனுடன் சண்டையிட்டது. அச்சண்டையில் பீமன் அந்த எருமையின் வாலைப் பிடித்து இழுத்து சண்டையிட்ட போது அந்த எருமை இரண்டாக பிரிந்தது.

பிரிந்த எருமையின் முன் பகுதியானது நேபாளத்தில் உள்ள சிபாடோல் என்னும் பகுதியில் விழுந்தது அந்த பகுதி தற்போது டோலே~;வர் மகாதேவ் கோயிலாக உள்ளது. அந்த எருமையின் பின்பகுதி விழுந்த இடம் கேதார் பகுதியாகும் அதுவே தற்போது கேதரேஸ்வரர் ஆலயமாக மாறியுள்ளது. அந்த சண்டையின் இறுதியில் கேதார்நாத் பகுதியில் சிவபெருமான் ஒரு முக்கோண வடிவ லிங்கமாக பாண்டவர்களின் முன்பு தோன்றினார்.

அப்போது பீமன், தாம் சிவனுடன் சண்டையிட்டோம் என்பதை உணர்ந்து மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டார். பாண்டவர்களின் பாவத்தைப் போக்கிய சிவபெருமான் கேதரேஸ்வரராக பாண்டவர்களிடம் என்னுடைய பக்தர்கள் இங்கு பக்தியோடு வந்து தரிசனம் செய்தால் என் அருளைப் பெறுவார்கள் என்று கூறி மறைந்தார்.

முதன்முதலில் இந்த இடத்தில் கோயிலை அமைத்த பெருமை இங்கு தவம் செய்த பாண்டவர்களையே சாரும். அதன் பிறகு இந்த கோயில் அர்ஜுனனின் பேரன் ஜனமேஜயா என்பவரால் மேலும் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது அமைந்துள்ள கட்டிட அமைப்பானது கி.பி 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரரின் வருகையின் போது கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கோயில் கிபி 14 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்திலிருந்து 1748 ஆம் ஆண்டு வரை பனி காலத்தின் உக்கிரமான வீரியத்தால் சுமார் நான்கு நூற்றாண்டுகள் பனி முழுவதும் சூழ்ந்து இக்கோயிலானது மூடப்பட்டிருந்தது.

தரையிலிருந்து ஆறு அடி உயர மேடையில் இந்த கோயிலானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் சுமார் 85 அடி உயரமும் 187 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்டது. கோயிலின் சுவர்கள் 12 அடி தடிமன் கொண்டவையாகவும் வலுவான கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளன. இந்த கோயிலில் கர்ப்பக்கிரகமும் ஒரு மண்டபமும் உள்ளன. மேலும் முன்புறத்தில் நந்தி சிலை அமைந்துள்ளது.

கோயில் அமைந்துள்ள பகுதியானது செங்குத்தான பாறைகள் நிறைந்ததாகவும் மற்றும் பனிப்பாறைகள் சூழப்பட்டதாகவும் உள்ளது. ஆதிசங்கரர் இந்த கேதார்நாத்தில் தான் மகா சமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கோயில் வளாகத்தின் பின்னால் அவருடைய சமாதிக்கு ஒரு சன்னதியும் உள்ளது.

Tags: jothilingamKedarnath Templesiven templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

20 லட்சம் தெருநாய்கள் ; 3.80 லட்சம் பேர் நாய்க்கடி பாதிப்பு – பொது சுகாதாரத் துறை அதிர்ச்சி தகவல் !

Next Post

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது ; ஐ.நா. விசாரணைக் குழுவின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

Related Posts

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா- பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு
Bakthi

January 23, 2026
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரம் கூடைதூக்கி ஶ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம்

January 21, 2026
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தருக்கு பூதகணம் வாயிலாக சிவபெருமான் பொற்கிழி வழங்கும் ஐதீக விழா

கேரளா மாநிலம் சபரிமலைஐயப்பன் திருக்கோவிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்து திருநடை அடைக்கப்பட்டது

January 20, 2026
Next Post
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது ; ஐ.நா. விசாரணைக் குழுவின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது ; ஐ.நா. விசாரணைக் குழுவின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறு சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கு அருகில் பெட்ரோல் பேங்க் கட்டுமான பணி.. பெற்றோர்கள் பொதுமக்கள் அச்சம்

January 24, 2026
குமரி மாவட்டம் கோதையாற்றில் உலாவும் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் வனத்துறையினர் யாரும் இல்லாமல் காட்சியளித்த அவலம்

தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரேந்தர்ஜா பங்கேற்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.