கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் : விஜய் வெளியே வராததற்கு தவெக தரப்பின் விளக்கம்

கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 10 குழந்தைகள் மற்றும் 17 பெண்கள் அடங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. கரூர் நகர் காவல்துறை சார்பில் 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் தவெக தரப்பைச் சார்ந்த வழக்கறிஞர் கூறியதன்படி, “கரூரில் பரப்புரை நடத்திய பகுதியில் காவல்துறை அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றினாலும், தவெக நிர்வாகிகள் அதை பின்பற்றவில்லை. சிலர் சிகிச்சை பெற்று வருவதால் இன்னும் சிலரை கைது செய்ய வேண்டிய நிலை உள்ளது. விஜய் பரப்புரைக்கு நாம் குறிப்பிட்ட பகுதிகளில் அனுமதி கோரினோம், ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. முதலில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம்; ஆனால் உண்மையில் கூட்டம் எதிர்பாராத அளவிற்கு பெரிதாக உருவானது. இது நாங்கள் எதிர்பார்த்ததல்ல. மக்கள், கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் விஜய்யை காண வந்து கூட்டம் பெரிதாகிவிட்டது. எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்ததில் விஜய்க்கு மிகவும் வருத்தம். அதனால் தான் அவர் வெளியே வரவில்லை” என்று விளக்கினார்.

நீதிபதி மன்சாட்சிப்படி உத்தரவு பிறப்பிப்பார் என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

Exit mobile version