தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே பாஜக விவசாய அணி சார்பில், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாத தமிழக அரசை கண்டித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மூட்டைக்கு 40 ரூபாய் 50 ரூபாய் லஞ்சம் வாங்குவது ஒரு திருட்டு. இது விவசாயிக்கு எதிரான நிலைப்பாடு.
அதேபோல் மூட்டைக்கு ஒன்றரை கிலோ அதிகமாக வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். திமுக தொடர்ந்து டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருவதாகவும் வருகின்ற தேர்தலில் திமுக வேரோடு கலைந்து எரியப்படும். கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழக வெற்றி கழகம் காவல்துறை அனுமதி அளித்த இடத்தில் தான் கூட்டம் நடத்தி இருக்கிறது, அந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மாவட்ட காவல் நிர்வாகத்தின் கடமை, அந்த கடமை தவறிய காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
சிபிஐ விசாரணை குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் விசாரணையில் இருக்கக் கூடாது என கூறி இருப்பதற்கு உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது என அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட பாஜக கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்