கன்னியாகுமரி மாவட்டம்: பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பொது பிரிவில் உள்ள சமுதாய மக்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமுல்படுத்த கோரி நடைபெற இருக்கும் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளாளர் சமுதாயம் மற்றும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்த கோரி நடைபெற இருக்கும் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ளாளர் சமுதாய மக்கள் மற்றும் அனைத்து அமைப்பினரும் கலந்து கொண்டனர் .
பின்னர் அவர்கள் கூறுகையில்.
10 சதவீதம் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வந்தது இதனால் மாவட்டத்தில் பொதுப்பிரிவினர் பொருளாதாரத்தில் நலிவடைந்த 750 குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர் எங்களது நோக்கம் தமிழக அரசு இதை அமல்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்த இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அரசு தமிழ்நாடு மட்டும்தான் இன்னும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. எங்களுக்கு தமிழக அரசு 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதே நடைபெறவிருக்கும் மாநாட்டின் நோக்கம் சுமார் 25,000 பேர் கூடும் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது என தெரிவித்தார்.
பேட்டி.
ஐயப்பா கார்த்திக். குமரி மாவட்ட வெள்ளாளர் கூட்டமைப்பு தென்னக மக்கள் இயக்க தலைவர்.














