காஞ்சி மகா பெரியவர் குருபூஜை விழா, மயிலாடுதுறையில் ஏராளமானவருக்கு அன்னதானம்

காஞ்சி மகா பெரியவர் குருபூஜை விழா, மயிலாடுதுறையில் ஏராளமானவருக்கு அன்னதானம் செய்து, வழிபாடு நடைபெற்றது :-

காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான மகா பெரியவா (ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்) அவர்களின் 133-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தன்று மகா பெரியவா அவதரித்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை திரு இந்தளூரில் குருபூஜை விழா நடைபெற்றது. மகா பெரியவர் திருவுருவப்படத்திற்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மகா தீபாரதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Exit mobile version