தூசி தட்டியபோது கிடைத்த ரூ.80 கோடி, உற்சாகத்தில் குடுமபம்

மும்பை: பங்குச் சந்தையின் அதிசயங்களை உறுதிப்படுத்தும் ஒரு நிஜ நிகழ்வு சமீபத்தில் இணையத்தில் பரவி வருகிறது. 1990-ஆம் ஆண்டில், JSW ஸ்டீல் நிறுவனத்தில் ₹1 லட்சம் முதலீடு செய்த ஒருவர், தற்போது ₹80 கோடி மதிப்பை எட்டியுள்ளது என்ற தகவல் வைரலாகியுள்ளது.

இது, நீண்ட கால முதலீட்டின் சக்தியை சுட்டிக்காட்டும் முக்கியமான எடுத்துக்காட்டு என சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன.

இந்த சம்பவம் முதலில் Reddit தளத்தில் பகிரப்பட்டது. பின்னர், முதலீட்டாளர் சவுரவ் தத்தா தன் X பக்கத்தில் இதனை வெளியிட்டு பரப்பினார். அவர் கூறுவதாவது, அவரது தந்தை 1990-களில் JSW ஸ்டீல் பங்குகளை வாங்கி வைத்திருந்தனர். தற்போது அதன் மதிப்பு ரூ.80 கோடி ஆக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.

இதனால், சமூக வலைதளங்களில் இந்த செய்தி பெரும் வரவேற்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

JSW ஸ்டீல் பங்கின் தற்போதைய நிலை

முதலீட்டாளர்களின் கருத்துகள்

சமூக வலைதளங்களில் பலர் இந்த சம்பவத்தைக் கொண்டாடி வருகின்றனர். ஒருவர், “இனி அவர் ஓய்வுபெற்று சுதந்திரமாக வாழலாம்,” என பதிவிட்டிருக்கிறார்.
மற்றொருவர், “நல்ல நிறுவனங்களை விற்க அவசரப்பட வேண்டாம். அடிப்படைகள் வலுவாக இருந்தால், காலம் தான் பெரிய வேலை செய்யும்,” என அறிவுரை கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு, ஒரு முதலீடு வெறும் பணத்தை மட்டும் அல்ல, தலைமுறை செல்வத்தையும் உருவாக்க முடியும் என்பதற்கான உத்தம எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

முக்கிய கவனிக்க வேண்டிய விஷயம்

பலரும் குறிப்பிட்டது போல, 1990-களில் ₹1 லட்சம் முதலீடு செய்வது என்பது சாதாரண குடும்பங்களுக்கு சாத்தியமற்ற விஷயம். எனினும், இதில் தெளிவாக தெரிகிறது – பொறுமை, நம்பிக்கை மற்றும் சரியான பங்கு தேர்வு என்பவை இணைந்தாலே, பங்குச் சந்தையில் சாதனை செய்வது சாத்தியம்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பொருளாதார நிபுணர்கள் கூறுவது: “நல்ல அடிப்படையுடன் (strong fundamentals) இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து, நீண்ட காலத்திற்கு அதை வைத்திருப்பதே உண்மையான முதலீட்டின் வெற்றிக்கருவி.”

JSW ஸ்டீல் பங்குகளில் 30 ஆண்டுகளாக நிரந்தர முதலீடாக இருந்த ₹1 லட்சம், இன்று ₹80 கோடியாக மாறியுள்ளது என்பது, முதலீட்டு உலகத்தில் ஒரு முக்கியக் குறிப்பாகும்.

Exit mobile version