பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்பட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் கலந்து கண்ட உரையாற்றினார். இந்த போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு மற்றும் முதுநிலை அனைத்து நிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும், டெட் தேர்வு ரத்து செய்திட வேண்டும், அரசாணை 243 ரத்து செய்திட வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் , சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்தி ட வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சொய்தியாளர்களை சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திமதிநாதன் இன்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 5 லட்சம் பேர் தமிழ்நாடு முழுக்க இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறுவார்கள் என்றும் இந்த போராட்டத்தின் முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கோரிக்கை ஏற்று அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்
