பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு மடை மாற்றி வேறு துறைகளுக்கு செலவு செய்கின்றது என்றும்,வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியார் திண்டிவனத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திண்டிவனம் காந்தி சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் சட்டமன்ற உரை விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் தலைவரும்,
சட்டமன்ற உறுப்பினருமாகிய ஜெகன் மூர்த்தியார் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்
றினார்.இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்
களை சந்தித்த அவர்,பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசு மடைமாற்றி வேறு துறைகளுக்கு செலவு செய்வதாகவும்,
குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கும் ,
பொது விநியோகத் திட்டத்திற்கும் இந்த நிதியில் இருந்து பெரும்பாலான
தொகையை எடுத்து செலவு செய்வதாக கூறிய அவர், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு மட்டுமே 400 கோடி ரூபாய் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறினார்.இதற்காக நான் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வரும் நிலையில் ,இது குறித்து வேறு யாரும் வாய் திறக்க மறுக்கின்றார்கள் என்று வேதனை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், தங்களது பிரச்சினைகளுக்காகபோராட்டம் நடத்தும் பட்டியல் இன மக்கள்மீதும்,
அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் இந்த அரசு வழக்கு போட்டு சிறையில் அடைப்பதன் மூலம் அடக்கு முறையை கையாளுகின்ற
இந்த அரசு சமூக நீதிக்கான அரசா?என்று கேள்வி எழுப்பிய அவர்,அரசுக்கு ஆதரவானவர்கள் மட்டும் தான் கருத்து தெரிவிக்க வேண்டுமா?என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர்,
இந்த அரசுக்கு எதிராக அரசுக்கு ஆதரவானவர்கள் தான் பேச வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். அரசுக்கு ஆதரவான ஆசிரியர் சங்கங்கள்,
செவிலியர்கள்,
துப்புரவு பணியாளர்கள்,
போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையெல்லாம் கேட்டால் எங்கள் மீது வழக்கு தொடுக்க நினைக்கின்றார்கள் என்று கூறினார்:
மேலும் அவர் பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, திருப்பரங்குன்
றத்தில்இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், அவரவர் மதத்தின் சட்ட திட்டங்களுக்கு ஏற்றார் போன்று எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் சாமி கும்பிட அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் அவர், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறினார்.
இதே போன்று பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், திண்டிவனம் நகர மன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலர் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவோம் என்று தெரிவித்தார்.

















