டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது மிதமான மழை பதிவாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலையில் இருந்து முற்றிலுமாக மழை இல்லாத நிலையில், இரவு 8 மணிக்கு மேல் மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளில் திடீரென மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

















