March 26, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மணல் கொள்ளை கட்டுப்படுத்துவது கலெக்டர்களின் பொறுப்பு : சென்னை உயர் நீதிமன்றம்

by Priscilla
December 17, 2025
in News
A A
0
மணல் கொள்ளை கட்டுப்படுத்துவது கலெக்டர்களின் பொறுப்பு : சென்னை உயர் நீதிமன்றம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
மணல் மற்றும் கனிம வளக் கொள்ளை, பணமும் அரசியல் ஆதாரமும் கொண்டு மாபியா போன்று நடைபெறுவதாக கடுமையாக சாடிய சென்னை உயர் நீதிமன்றம், இத்தகைய சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் நேரடி பொறுப்பு எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக் கொள்ளை தொடர்பான வழக்கில், புவியியல் மற்றும் கனிம வளத் துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முன்பே உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, புவியியல் மற்றும் கனிம வளத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மணல் மற்றும் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தாண்டு மார்ச் 31க்குள் இந்தப் பணிகள் நிறைவு பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2020 முதல் 2025 நவம்பர் வரை 1,439 சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டது கண்டறியப்பட்டு, 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், பதிவான வழக்குகளில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் ஏன் அறிக்கையில் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும், ரூ.5 கோடி மதிப்பிலான கனிம வள கொள்ளை நடந்த வழக்கில் ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதால் என்ன பயன் கிடைக்கும் எனவும் விமர்சனம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அரசியல் மற்றும் பண பலத்தின் துணையுடன் மணல் மற்றும் கனிம வளக் கொள்ளைக் கும்பல்கள் மாபியா போல் செயல்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இத்தகைய கொள்ளைகளை தடுக்க அதிகாரிகள் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர். மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையை தடுப்பது மாவட்ட கலெக்டர்களின் பிரதான பொறுப்பு என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து புகார் அளிக்க தவறிய வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மணல் மற்றும் கனிம வள கொள்ளை குறித்து புகார் அளிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்றும், கொள்ளையை தடுக்கும் வகையில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் முடித்து வைத்தது.

Tags: chennai high courtCOLLECTORShigh courtINCHARGESAND MINING
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : கேள்விகளுக்கு மத்தியில் அமர்வை விட்டு வெளியேறிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Next Post

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

Related Posts

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு
News

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்
Bakthi

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பஞ்சபூதத் தலங்கள் – நீர் ஸ்தலம் – திருவாப்புடையார் கோயில்

October 30, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

0
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

0
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

0
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

0
விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

March 25, 2026
மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

March 25, 2026
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

March 25, 2026
கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.