திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஒரே இடத்திற்கு இருவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள அவலம்: ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத ஒருவருக்கு நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா போட்டு கொடுத்துள்ள வருவாய்த்துறை அதிகாரிகள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் எருக்குவாய் கண்டிகை கிராமத்தில் வசிக்கும் ராமகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் எருக்குவாய் கண்டிகை பகுதியில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் சர்வே எண் 145/25 இல் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் தலைமுறை தலைமுறையாய் குடியிருந்து வரும் நிலையில் முறையாக இடத்திற்கு பட்டா வாங்கி அதற்கான வீட்டு வரி மின் இணைப்பு பெற்று வாழ்ந்து வருவதாகவும் ஆனால் திடீரென பொன்னேரி தொகுதி ஆரணி பேரூராட்சியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் எனது வீட்டினை இடிக்க முயன்றதுடன் இது என்னுடைய இடம் நாங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டா பெற்று விட்டோம் என கூறி வருகிறார் இது குறித்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளதாகவும் எருக்குவாய் ஊராட்சிக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் வாழ்ந்து வரும் நாங்கள் ஏற்கனவே அந்த இடத்திற்கு பட்டா பெற்று உள்ள நிலையில் திடீரென வேறு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் ஒருவர் தனது இடத்திற்கு சொந்தம் கொண்டாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் மீது உள்ள பட்டாவை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்
அரசு நத்தம் புறம்போக்கு இடத்திற்கு இருவருக்கு பட்டா வழங்கியுள்ள வருவாய்த்துறையினர் செயலால் ஊராட்சி குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
