காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடரும் – பட்டினியால் மரணங்கள் அதிகரிப்பு

இஸ்ரேல் – பாலஸ்தீனக் காட்சியிடையே தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதலில், காஸா பகுதியில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆறு வார பச்சிளம் குழந்தையும் அடங்கும் என காஸா சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில், 1,200 பேர் உயிரிழந்ததுடன், 252 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கபட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது. இந்த போரில் இதுவரை 57,800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

காஸாவில் தற்போது நிலவும் மனிதாபிமான நிலைமை மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. உணவு மற்றும் மருத்துவ உதவிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் பட்டினியில் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை பட்டினியால் 101 பேர், அதில் 80 குழந்தைகள் உட்பட, உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

உணவுக்காக காத்திருந்தோர் மீது கூட இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இவ்வாறு நடைபெற்ற தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களின் நிலையும் மோசம்

காஸாவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களின் நிலையும் மிகவும் பரிதாபமாக உள்ளது என AFP செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 21 மாதங்களாக இடையிலான ஒரு மாத இடைவேளை தவிர, இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழையை பொழிந்து வருவதால், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மக்கள் பாதுகாப்பில்லா சூழ்நிலையில் வாழும் நெருக்கடியான சூழல் நிலவுகிறது.

இஸ்ரேலில் போருக்கு எதிரான மக்கள் போராட்டம்

இஸ்ரேலுக்குள் பலர் தற்போது காஸா மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஸா பசித்துக் கிடக்கும் குழந்தைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், “உணவு விநியோகம் தாங்கள் தடை செய்யவில்லை” என இஸ்ரேல் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version