“மாணம் உள்ள காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்வதற்கான நியாயம் உள்ளதா ?” என்ற கேள்வியுடன், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் எதிராக கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “1967ம் ஆண்டு தேர்தலில் காமராஜரை வீழ்த்தியது தி.மு.க.வின் பொய்ப் பிரசாரமே. காமராஜரை வீழ்த்தியதன் பிரதான பொறுப்பாளி தி.மு.க.தான்” என்று குற்றஞ்சாட்டினார். மேலும், “கர்மவீரர் காமராஜரைப் பற்றி பேச தி.மு.க.வுக்கு சதவீத உரிமையும் இல்லை” எனக் கடுமையாக தாக்குப் பிடித்தார்.
“மாணம் காக்க தனியாக போட்டியிட தயாரா காங்கிரஸ் ?”
அதிகார கூட்டணியில் தொடரும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்வியெழுப்பிய அண்ணாமலை, “மாணம் இருந்தால், தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி, தனியாக போட்டியிடுங்கள். அல்லது குறைந்தபட்சமாக காமராஜரின் மரியாதைக்காக அந்த கூட்டணியில் இருந்து வெளியே வாருங்கள்” என்று சவால்விடுத்தார்.
“நாளைமறுதினம் தி.மு.க.வினர் டெல்லியில் ராகுல் மற்றும் சோனியாவை சந்திப்பார்கள்; அதற்குப் பிறகு, தங்கள் அடிமைகள் போலவே காங்கிரஸ் செயல்படும்,” என அவர் விமர்சித்தார்.
“காங்கிரசின் ஒரே அடையாளம் காமராஜர் !”
தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குறித்து பேசும் போது, “காமராஜரைத் தவிர காங்கிரசுக்கு தமிழகத்தில் வேறு எவ்வித அடையாளமும் இல்லை. அவரை இழிவுபடுத்திய பிறகு, அந்தக் கூட்டணியில் தொடர்வதற்கான நியாயம் எது?” என கேள்வி எழுப்பினார்.
“இது போன்ற கேள்விகளை தற்போது பொதுமக்களும் கேட்கத் தொடங்கியுள்ளனர்,” என அண்ணாமலை வலியுறுத்தினார்.