ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஐபிஎல் ஆட்டம் ஒரு வாரம் இடை நிறுத்தம் செய்யப்பட்டது. போர் பதற்றம் தணிந்த பின், தர்மசாலாவில் மே 7ம் தேதி நிறுத்தப்பட்ட போட்டி மே 17ம் தேதி மீண்டும் தொடங்கியது. அப்போது லீக் ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் மாற்றப்பட்டன. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் மே 29, 30, ஜூன் 1ம் தேதிகளிலும், இறுதி ஆட்டம் ஜூன் 3ம் தேதியும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் பிளே ஆப் மற்றும் பைனல் நடைபெறும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே அறிவித்த மாற்றப்பட்ட தேதிகளில், ஐதராபாத்தில் நடைபெற இருந்த முதல் குவாலிபயர், எலிமினேட்டர் ஆட்டங்கள் முல்லான்பூரிலும் (சண்டீகர்), கொல்கத்தாவில் நடைபெற இருந்த 2வது குவாலிபயர், இறுதி ஆட்டங்கள் அகமதாபாத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.