காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாத் அணை கட்ட தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதை கண்டித்து மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் உழவர் எழுச்சி பேரணியில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக முதல்வர் குரல் எழுப்பவில்லையென்றால் இந்த தேர்தலில் நோட்டவிற்கு வாக்களிப்போம் பெ.மணியரசன் பேட்டி
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாத் அணை கட்ட தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதை கண்டித்தும் , தமிழ்நாட்டு காவிரி உரிமை பறித்து கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படுவதற்காக ஒன்றிய அரசால் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக அமர்த்தபட்ட எஸ்.கே.ஹெல்தர் அந்த பதிவில் இருந்து உடனே வெளியேற்ற வலியுறுத்தியும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்மணிகளை 22 சதவீதம் வரை ஈரபதம் பார்க்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் , 2025 விதை சட்ட வரைவு மசோதாவை கைவிட வேண்டும். அனைத்து வேளாண் விளைப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) நிர்ணய செய்து சட்ட பூர்வமாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் டெல்டா மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 35 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் உழவர்களின் உரிமை மின்சாரத்தை பாதிக்கும் வகையில் மின்சார திருத்த சட்ட முன் வரைவு 2025 யை உடனே திரும்ப பெற வேண்டும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்க்கு தஞ்சாவூரில் நினைவு மணி மண்டபத்தில் திருவுறுவ சிலை நிறுவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் உழவர் எழுச்சி பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ மணியரசன் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முன்னதாக பேரணி தேரடியில் தொடங்கி நகரின் முக்கிய வீதீகளின் வழியாக சென்று நகராட்சி முன் வைக்கபட்ட வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மணியரசன் கர்நாடக போல தமிழகத்தில் விவசாயிகளுக்கு முதல்வர் குரல் எழுப்பவில்லை இணியும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லையென்றால் இந்த தேர்தலில் நோட்டவிற்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்
பேட்டி
பெ.மணியரசன் ஒருங்கினைப்பாளர் காவிரி உரிமை மீட்புகுழு

















