குற்றவாளியை குற்றவாளிதான் என எந்த ஒரு ஆட்சியாளன் நினைக்கிறானோ அவன் தான் சிறந்த ஆட்சியாளன். இதற்கு எடுத்துக்காட்டு கக்கன்.
மடப்புரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
அஜித் குமாரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த அந்த உத்தரவை பிறப்பித்த மேலதிகாரி யார்?
காவல்துறையினர் அடித்தே அஜித் குமாரின் உயிரை உடம்பிலிருந்து பிரித்துள்ளார்கள், நான் நடத்த அனுமதி கேட்கும் போராட்டத்தில் பல நெறிமுறைகளை வகுக்கும் காவல்துறை அஜித் குமார் விசாரணையில் ஏன் கடைபிடிக்கவில்லை ?
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வருக்கு தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லையா? முதல்வர் சிபிஐக்கு உத்தரவிட்டது குற்றவாளிகளை மறைக்கும் நடவடிக்கையே.
காவலர்கள் விசாரணை என்ற பெயரில் நீதிமன்றம் அறிவுறுத்திய எந்த வழிமுறைகளையும் பின்பற்றவில்லை.
நிகிதா மேல் கொடுக்கப்பட்ட எத்தனையோ புகாரில் வழக்கும் பதியப்படவில்லை, விசாரணையும் நடத்தப்படவில்லை.