டில்லி கார்குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

காந்தி கொல்லப்படுவதற்கு காரணம் கோட்சே அல்ல.அவருக்கு துணையாக நின்ற காங்கிரஸ் கட்சி.இவர் இருந்தால் தொல்லை என்று நினைத்தார்கள்.பிரிட்டீஸ்காரன் 40 ஆண்டுகள் காந்திஜியை காப்பாற்றி விட்டார்கள்.இவர்களால் 6 மாதம் கூட காப்பாற்ற முடியவில்லை.

இந்திரா காந்தி அம்மையார் கொல்லப்படுவதற்கு யார் காரணம்.அவர்களின் சொந்த வீட்டில் சொந்த பாதுகாவலரால் கொல்லப்படுகிறார்.

நீண்ட காலமாக எநீதவித பயங்கரவாத தாக்குதல்களும் இல்லாமல் இருந்தது.இப்போது இது நடந்துள்ளது.

குண்டு வெடித்தால் பீகார் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடும் . அப்படியென்றால் காங்கிரஸ் தான் திட்டமிட்டுள்ளதா…ராகுலை கைது செய்ய வேண்டுமா..வேண்டாமா..
டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் பேட்டி

Exit mobile version