DMK,ADMK மாற்றம்தேவை என மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என விவசாயிகள் மாநிலதலைவர் பொன்.குமார் பேட்டி

நீண்ட காலமாக திராவிட கொள்கையை உள்வாங்கி இருக்கிற திமுக , அதிமுக கட்சிகளை அழிப்பதற்கு இந்திய அளவில் ஆதிக்க சக்திகள் தொடர்ந்து வலை வீசி வருகிறது அவர்கள் வீசிய வலை தான் மாற்றம் தேவை என மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று கூத்தாநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநில தலைவர் பொன்.குமார் பேட்டி .

திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி தனியார் திருமண அரங்கில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பாக மே தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அப்போது பேசிய மாநில தலைவர் பொன் குமார் தமிழக மக்கள் முதலமைச்சர் விஜய்க்கு ஒரு அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் ஆட்சி பொறுப்பை இன்று ஏற்று இருக்கிறார்கள் அதற்கு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது மிகப்பெரிய தமிழ்நாட்டை ஆளுமைக்கு உட்படுத்தியிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் , அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளை இன்றைக்கு பின்னுக்கு தள்ளி முன்னுக்கு நடிகர் விஜய் வந்திருக்கிறார் மக்கள் அவருக்கு மகத்தான ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் இந்த இரண்டு கட்சிகளும் வெற்றி வாய்ப்பை இழந்தது மட்டுமல்ல ஒரு பின்னடைவை சந்தித்து இருக்கிறது இன்றைக்கு எல்லோரும் இளைஞர்கள் வாக்களித்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அந்த இளைஞர்களை நெறிப்படுத்த தவறியது யார் இவையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் ஆய்வு செய்ய வேண்டும் ஆய்வு செய்து குறைகளை சரிப்படுத்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒரு மாற்றத்தை வேண்டி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் மத்திய அரசினுடைய ஒப்புதல் அவருக்கு கிடைக்குமா ? அவைகள் கிடைக்கவில்லை என்றால் அதை பெறுவதற்கு எப்படிப்பட்ட வியூகத்தை அவர் மேற்கொள்ள போகிறார் அல்லது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போன்று மோடி அரசை எதிர்த்து நின்று தமிழ்நாட்டில் உடைய உரிமைக்காக போராட போகிறாரா? என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் . இன்றைக்கு அவருடைய பதவி ஏற்பு நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்தில் கொண்டுபோய் சேர்த்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது அதிகாரிகள் முதலமைச்சரை தவறாக வழி நடத்தி இருக்கிறார்கள் என்று நம்புகிறேன் அதை முதலமைச்சர் ஆய்வு செய்து இந்த தமிழ் தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு கொண்டு சென்ற அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்தால் தான் இந்த இந்த துறையில் இருந்து நீங்கள் முயற்சி பெற முடியும் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் தினிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மோடி அரசு மேற்கொண்டு வருகிறது அதை தடுத்து நிறுத்துகிற கேடயமாக இதுவரை தமிழ்நாடு இருந்து இருக்கிறது தமிழ் மொழி என்பது ஆயிரம் காலத்துப் பயிர் உலக மொழியியல் அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு செம்மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழி ஆறு மொழிகளில் இன்றைக்கு 4 மொழிகள் காணாமல் போய்விட்டது சமஸ்கிருதத்தை மக்கள் பேசுவதில்லை சீனமும் , தமிழ் மட்டும்தான் இன்றைக்கு உயிரோடு இருக்கக்கூடிய மொழி அந்த தமிழ் மொழியை ஒழிப்பதற்கு அந்த இடத்தில் இந்தியையும் , சமஸ்கிருதத்தையும் கொண்டு வந்து திணிப்பதற்காக தொடர் முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது அதை புதிதாக பொறுப்பேற்றிருக்க முதலமைச்சர் எக்காரணத்தைக் கொண்டும் தமிழ் மொழி தமிழர்களுடைய நாகரீக பண்பாடு இவைகளை விட்டுக் கொடுக்காமல் கட்டிக்காப்பதில் முனைப்போடு இருப்பது தான் அவர்களுடைய எதிர்கால அரசியலில் உகந்ததாக இருக்கும் என்கிற அந்த ஒரு நிலைப்பாட்டையும் உணர வேண்டும் . நீண்ட காலமாக திராவிட கொள்கையை பெரியார் கொள்கையை , சமூக நீதிக் கொள்கையை உள்வாங்கி இருக்கிற இந்த கட்சிகளை அழிப்பதற்கு இந்திய அளவில் ஆதிக்க சக்திகள் தொடர்ந்து வலை வீசி வருகிறது அவர்கள் வீசிய வலை தான் மாற்றம் தேவை என்பது அதை மக்கள் கவர்ச்சியாக சொன்னார்கள் மாற்றம் தேவை என்று மாற்றத்தை விரும்புவர்களிடம் கேட்டுப் பாருங்கள் எதை மாற்ற வேண்டும் அதை காரணம் சொல்ல முடியாது ஏதோ மாற்றத்தை வேண்டி வாக்களித்து இருக்கிறார்கள் மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார் . இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் சேகர் , மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் , பொது செயலாளர்கள் சுந்தர்ராஜ் , ஜெகதீசன் ,ஜெகமுருகன் ,அமைப்பு செயலாளர் பூங்கோதை
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version