கன்னியாகுமரி மாவட்டத்தில் BJP-விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு அதிருப்தி சுயேட்சையாக களம் காண்பேன் என பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க., விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு செய்ததால் அதிருப்தி – முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் போர்க்கொடி – கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் சுயேட்சையாக களம் காண்பேன் என பேட்டி.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் இன்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியை தவிர மீதமுள்ள ஐந்து தொகுதிகளில் பாஜக 4 தொகுதியிலும் தாமாகா ஒரு தொகுதியிலும் என ஐந்து தொகுதிகளும் வேட்பாளர்கள் தேர்தல் களம் காண உள்ளனர் இதற்கு அதிமுக தொண்டர்கள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது , கடந்த காலங்களில் மூன்று தொகுதி அதிமுக 3 தொகுதி பாஜக என களம் கண்ட நிலையில் தற்போது மொத்தமாக ஐந்து தொகுதி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் களம் காண்பது இதுவே முதல் முறை இந்த நிலையில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பா.ஜ.க., விற்கு 4 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திற்கு எதிராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாங்கள் முருகேசன் போர்க்கொடி தூக்கியுள்ளார் ,

இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் முருகேசன் கூறுகையில் ,

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராக தளவாய் சுந்தரம் நிறுத்தப்பட்டால் அவருக்கு எதிராக தேர்தல் பணி செய்வோம் என கூறிய அவர்
தளவாய் சுந்தரம் மீண்டும் நிறுத்தப்பட்டால், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் 2 சட்டமன்ற தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளராக களம் காண்பேன்.

தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பா,ஜ.க.,விற்கு அதிக தொகுதியை ஒதுக்க திட்டமிட்டு கொடுத்துள்ளார்.

எடப்பாடியாரை நம்புகிறேன். தளவாய் சுந்தரம் தான் எடுப்படியார்க்கு துரோகம் செய்து வருகிறார்.
80 சதவீதம் நாடார் சமுதாய மக்கள் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க படுகிறது.
தளவாய் சுந்தரம் நாடார் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார்.
தளவாய் சுந்தரத்தை விட 1 ஓட்டு குறைவாக எடுத்தால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்.
எடப்பாடியார் என்னை கூப்பிட வில்லை.
பணம் செலவு பண்ணோம் ஆனால் மதிக்கவில்லை என கூறினார்.

Exit mobile version