கோவை : இன்ஸ்டாகிராமில் கருத்தியல் பதிவுகள் மூலம் பிரபலம் பெற்ற 20 வயது இளம்பெண் வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சித் தொண்டர்களான Virtual Warriors மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன் தவெக கட்சியில் இருந்து விலகிய வைஷ்ணவி, திமுகவில் இணைந்திருந்தார். கட்சி மாற்றம் குறித்து கேட்கப்பட்ட போது, “தவெக என்பது பாஜகவின் இன்னொரு வடிவம். இளைஞர்களுக்கு முன்னுரிமை இல்லை. மேலும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க கூட மாட்டேன் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன,” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கடுமையான ஆன்லைன் தொல்லை மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டதாகக் கூறும் வைஷ்ணவி, அதன் பின்னணியில் தவெக தலைவர் விஜயும், கட்சியின் சமூக வலைத்தள அணியான Virtual Warriors உறுப்பினர்களும் உள்ளனர் எனக் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் மனு அளித்துள்ளார்.