சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் நேற்று இரவு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதில் பயணிகள் 160 பேர் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
விமானம் காஞ்சிபுரம் வழியாக வேலூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திர கோளாறு கண்டறியப்பட்டது. உடனடியாக விமானி அவசர நடவடிக்கை எடுத்து, சென்னைக்கு திருப்பி வந்து பாதுகாப்பாக தரையிறக்கினார்.
விமானி எடுத்த துரிதமான முடிவு காரணமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தில் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக பயணிகள், தங்களின் பயணம் தாமதமானதால் ஏற்பட்ட சிரமத்தை வெளிப்படுத்தினர். சமீப காலமாக தொடர்ச்சியாக விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுவது குறித்து பயணிகள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

















