உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மோர் விநியோகம்

உலக ரெட் கிராஸ் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உலக ரெட் கிராஸ் திட்டத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதற்காக தேனி பழைய பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

கடுமையான வெயிலின் தாக்கத்தால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் ஏராளமான பொதுமக்கள் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு சார்பில் வழங்கப்படும் தண்ணீர் மற்றும் மோரை வாங்கி குடித்து விட்டு தங்களது தாகத்தை தீர்த்துக் கொண்டு செல்கின்றனர்

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்

Exit mobile version