இந்திய U19 கிரிக்கெட் அணி, எதிர்வரும் மாதம் இங்கிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடரானது ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை நடைபெறவிருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் அபிக்யான் குண்டு செயற்படவுள்ளார்.
தற்போதைய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளங்கியுள்ள, வெறும் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி, இந்த U19 அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய U19 அணியில் இடம்பிடித்த வீரர்கள் விவரம் :
ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, ராவ் ராகவேந்திரா, முகமது ஏனான், ஆதித்யா சிங், அன்மோலி ரனா
இந்த இளைஞர்களின் செயல்திறன், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.