அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் ரூ. 6 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க இந்தியா இலக்கு : பிரதமர் மோடி

டோக்கியோ :
இந்தியா–ஜப்பான் வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானிலிருந்து ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

15-ஆவது இந்தியா–ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு சென்றடைந்தார். அங்கு டோக்கியோ விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர், இம்பீரியல் உணவகத்தில் மோடிக்கு ஜப்பானியர்கள் காயத்ரி மந்திரம் ஓதி, ராஜஸ்தானி உடையில் பஜனை பாடி பாரம்பரிய நடனங்கள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் மோடி ஈடுபட்டார். இதில் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் நடைபெற்ற இந்தியா–ஜப்பான் வர்த்தக மாநாட்டில் மோடி,
“ஜப்பானுடனான பொருளாதார உறவு வலுவாக உள்ளது. சிறு, நடுத்தர நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா–ஜப்பான் இணைந்து செயல்படும். உயர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கூட்டாண்மை 2.0 போன்ற துறைகள் எதிர்கால ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிக்கும்” என்று தெரிவித்தார்.

Exit mobile version