மயிலாடுதுறை அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடியில், தமிழக வெற்றி கழகத்தின் மயிலாடுதுறை ஒன்றிய கழகம் சார்பில் புதிய அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மத்திய ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கோபிநாத் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார், தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். அலுவலகம் திறப்பு விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகர செயலாளர் ராஜ்குமார் மற்றும் ஒன்றிய, நகர பிற அணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.













